Advertisement

தலைப்பு- மத்ஹப் مذهب பாகம் 08.



🔰எல்லோரும் தீர்ப்பு செய்து கொள்ளுங்கள் என்று விட்டால் இது ஒரு மார்க்கம் அல்ல இது குழப்பம்.





💎எனவே இதற்கு அல்லாஹ் குர்ஆனில் தீர்ப்பு சொல்கிறான்....!

ஸுரா நிஸாவுடைய வசனம்

 وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ ۖ وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَىٰ أُولِي الْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنْبِطُونَهُ مِنْهُمْ ۗ وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَاتَّبَعْتُمُ الشَّيْطَانَ إِلَّا قَلِيلًا

சுருக்கம்-
உங்களுக்கு ஏதாவது தீர்ப்பு செய்யவேண்டி வந்தால் நீங்கள் தீர்ப்பு வாங்க வேண்டும்/ நாட வேண்டியது யாரிடம் தெரியுமா?
யார் குர்ஆன் ஸுன்னாவில் இருந்து சட்டம் வெளியாக்கும் தகமை உள்ளவர்களோ அவர்களிடம்.

🔸️இங்கே ஆலிம் (குர்ஆன் ஹதீஸ் படித்தவர்) என்று சொல்லப்படவில்லை.
🔸️இங்கே ஹாfபில் ( குர்ஆன் ஹதீஸ் மனனம் செய்தவர்) என்று சொல்லப்படவில்லை.

🔷️'முஸ்தம்பித்திடம்' என்று சொல்லப்பட்டுள்ளது.(குர்ஆன் ஸுன்னாவில் இருந்து சட்டம் எடுப்பவர்).

◻இதில் வித்தியாசம் இருக்கிறது. என்த அளவு என்றால்

🌷இமாம் அஹ்மத் இப்னு ஹம்பழ் (ரஹ்) பத்து லட்சம் ஹதீஸ்களை மனனம் செய்திருந்தார். இமாம் அஹ்மத் (ரஹ்) சொல்கிறார்-
என்னுடைய வாழ்க்கையில் நான் தொழுத தொழுகையில் எல்லாம் நான் இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்களுக்கு துஆ செய்கிறேன். ஏனென்றால் நாங்கள் ஹதீஸிலிருந்து சட்டம் வெளியாக்க தெரியாமல் இருந்தோம், இமாம் ஷாஃபி (ரஹ்) தான் எங்களுக்கு படித்துத் தந்தார்.

🔶️கலீfபா ஹாரூன் ரஷீத் உடைய ஆட்சி காலத்தில் அப்துர் ரஹ்மான் அல் மஹ்தி (ரஹ்) பக்தாதிலிருந்து மக்காவுக்கு கடிதம் எழுதினார் இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்களுக்கு.
கேள்வி கேட்டு எழுதினார்- "நீங்கள் குர்ஆன் ஸுன்னாவில் இருந்து சட்டம் எப்படி வெளியாக்குறீர்கள்?".
இமாம் ஷாஃபி (ரஹ்) பதில் கடிதம் எழுதினார். எழுதினார்..... எழுதினார்..... எழுதினார்..... அது ஒரு பெரிய கிதாப்பாக ஆகிவிட்டது. இந்த கிதாப்புக்கு பெயர் இன்றுவரை 'கடிதம்' தான் (ஏனென்றால் எழுதியது பதில் கடிதம்).

🌷இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்களுடைய 'ரிஸாலா'.
இந்த கிதாப் தான் உலக சரித்திரத்தில் (உஸூலுல் ஃபிக்ஹ்) குர்ஆன் ஸுன்னாவில் இருந்து சட்டம் எப்படி வெளியாக்குவது..... என்ற தலைப்பில் எழுதப்பட்ட முதலாவது கிதாப்.

💎யார் முழு உலகத்துக்கும் குர்ஆன் ஸுன்னாவில் இருந்து சட்டம் வெளியாக்குவது எப்படி என்று படித்து கொடுத்தாரோ....அவர் தகுதி இல்லையா தீர்வு கொடுக்க?

🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘
மத்ஹப் பின்பற்றுவது என்றால் என்ன?
ஸரீஹான நஸ்ஃ        -நேரடியாக பின்பற்றுவது
fபத்வாக்குரிய நஸ்ஃ -இமாம் ஷாஃபி(ரஹ்) இடம் fபத்வா எடுப்பது.
🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘

💣மதஹப் என்றால் பில்டிங் அல்ல
💣மதஹப் என்றால் சன்தாக்கு அல்ல
💣மதஹப் என்றால் வழிகேடு அல்ல
💣மதஹப் என்றால் குர்ஆனுக்கு எதிரான சூழ்ச்சி
   அல்ல
💣மதஹப் என்றால் ஹதீஸுக்கு எதிரான சூழ்ச்சி
   அல்ல
🔷️🔸️🔷️🔸️🔷️🔸️🔷️🔸️🔷️🔸️

💥இமாம் திர்மிதி தன்னுடைய நூலில் சொல்கிறார் "நான் ஒரு ஷாஃபியீ என்று"
💥இமாம் நஸஈஃ சொல்கிறார் "நான் ஒரு ஷாஃபியீ என்று"
💥இமாம் இப்னு மாஜா சொல்கிறார் "நான் ஒரு ஷாஃபியீ என்று"
💥இமாம் அபூ தாவுத் சொல்கிறார் "நான் ஒரு ஹம்பழீய் என்று"
💥இமாம் புகாரி சொல்கிறார் "நான் ஒரு ஷாஃபியீ என்று"
💥இமாம் முஸ்லிம் சொல்கிறார் "நான் ஒரு ஷாஃபியீ என்று"
💥இமாம் முல்லா அலி காரி ஒரு "ஹனபி"
💥இமாம் யஹ்யா பின் மயீன் ஒரு "ஹனபி"

இந்த நாலு மத்ஹப் உடைய இமாம்களை பின்பற்றாத என்த ஒரு முஹத்திஸோ, என்த ஒரு முதகல்லிமோ, என்த ஒரு ஃபகீஹோ உலகத்தில் வாழ்ந்தது இல்லை....மறந்து விடாதீர்கள்.

-Asad lio

Post a Comment

0 Comments