🔰நேர் வழி
⚘அல்லாஹு தஃலா எங்களை ஒவ்வொரு நாளும் துஆ செய்ய வைக்கிறான் நேர் வழியை கேட்டு.
நாங்கள் துஆ கேட்பதை ஃபர்ளாக்கி உள்ளான்.
اهدنا الصراط المستقيم
எங்களுக்கு நேரான வழியைக் காட்டு.

💎அது என்த வழி
صراط الذين انعمت عليهم
நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அந்த மக்களின் வழி.
🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘
🔶️நேர் வழி என்றது ஒரு அறிவு இல்லை, ஒரு தியரி(Theory) இல்லை. இன்றைக்கு தியரில போற ஆட்கள் வந்து அந்த 'பேன்ட் சேர்ட்' போட்ட ஆட்கள்.
அவர்கள் எல்லோருக்கும் ஒரு தியரி இருக்கி.
🔹️அக்கவுண்டனுக்கும் தியரி இருக்கிறது , அவன் எந்த பட்டன் அமுக்கினால் எது வரும் என்று ஒரு தியரி இருக்கிறது.
🔹️அக்கவுண்ட்ச் என்றது கணக்கு பார்ப்பதில்லையே இன்றைக்கு. பட்டன் அமுக்குறது தான் அக்கவுண்டச். அந்த தியரிய படிக்கிறதுக்குத் தான் அவ்வளவு காலம் செலவு செய்கிறார்கள்.
🔹️டாக்டர் என்ன செய்கிறார்? W.H.O உடைய தியரிய பிரெக்டிச் செய்கிறார்....அவ்வளவுதான்.
🔹️வழக்கறிஞர் என்ன செய்கிறார்? இங்கிலிஷ் law உடைய தியரிய பிரெக்டிச் செய்கிறார்.... அவ்வளவுதான்.
🔹️தியிரி அல்ல நேர் வழி.
🔶️நேர் வழி என்றது (Practical) நடைமுறை. அதனால் தான் செயல்பட்ட ஒரு சமுதாயத்துடைய வழியின் பக்கம் அல்லாஹ் إشارة சமிக்ஞை செய்கிறான்.
🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘
⚘அல்லாஹ் யாருக்கு அருள் புரிந்தான்?
🔸️அதையும் குர்ஆனிலேயே தப்fஸீர் செய்து விட்டான்.
வேறு யாராவது இன்றைக்கு தப்fஸீர் செய்வது போல், மூக்கை நுழைக்காமல் இருக்க.
🔷️சூரா நிஸாவுடைய வசனம்
أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ ۚ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا
அல்லாஹு தஃலா நபிமார்கள், ஸித்தீக்குகள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்களுக்கு அருள் புரிந்தான்.
எனவே அல்லாஹ் இடத்தில் நேர் வழி என்றது இந்த நான்கு கூட்டத்துடைய வழி.
🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘
மனோ இச்சையில் நேர் வழி எதுவும் இருக்கலாம். அவர்களுடைய Creativity/ படைப்பாற்றல், கற்பனையில் உருவாக்கிக் கொண்ட நேர் வழி எதுவும் இருக்கலாம்.
🔴ஆனால்
அல்லாஹ் இடத்தில் நேர் வழி என்றது இந்த நான்கு கூட்டத்துடைய வழி.
🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘
இப்போது இந்த நான்கு கூட்டம் யார்?
✔1.நபிமார்கள்-
பரிசுத்தமான வம்சத்தில் பரிசுத்தமான அடியாட்களில் இருந்து தேர்ந்தெடுத்தான். அவர்களில் பெரும்பாலானோரை நாற்பது வயது வரைக்கும் அல்லாஹு தஃலா பரிபாலனம் செய்தான். அதற்குப் பின்னால் நுபுவ்வத் கொடுக்கப்பட்டது. வஹியைக் கொண்டு அவர்களின் மூலமாக உம்மத்துக்கு தர்பியத் செய்தான்.
✔2.ஸித்தீக்குகள்,
✔3.ஷுஹதாக்கள்-
அல்லாஹ் இடத்தில் ஸித்தீக்குகளும் ஷுஹதாக்களும் ஸஹாபாக்கள் தான்.
சூரா ஹதீதுடைய வசனம்
وَالَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرُسُلِهِ أُولَٰئِكَ هُمُ الصِّدِّيقُونَ ۖ وَالشُّهَدَاءُ عِنْدَ رَبِّهِمْ
எவர்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்கள் தாம் தங்கள் இறைவன் முன் உண்மையாளர்களாகவும், உயிர் தியாகிகளாகவும் இருப்பார்கள்.
யார் எல்லாம் வஹி இறங்கும் போது ஹயாத்தோடு இருந்தார்களோ அவர்களுக்குத் தான்(அந்த அவர்கள்) أُولَٰئِكَ هُمُ என்று பேசும் குர்ஆன்.
✔4. ஸாலிஹீன்கள்-
நல்ல மக்கள், நல்ல செயல்பாடு, நல்ல கொள்கை உள்ளவர்கள்.
அவர்கள் யாரென்று வஹியிலேயே தீர்மானிக்க வேண்டும்.
வெளியில் போனோம் என்றால்/என்ன நடக்கும் என்றால் எங்களுடைய காலத்தில் நல்ல மக்கள் என்று சொல்லப்படக் கூடிய மக்கள் எல்லாருமே நல்ல மக்களாக ஆகிவிடுவார்கள்.
⚠️இந்த காலம் இருக்கிறதே இதில் (Information) தகவல் பிழை அதனால் (Decision) முடிவு பிழை.
தகவல் என்ன?
💣என்தக் கல்வியால் அல்லாஹ் தஃலா காஃபிர்களை அழித்தானோ அந்தக் கல்வியைத் தான் நாங்கள் கல்வியாக பிடிக்கிறோம்.
فَلَمَّا جَاءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنَاتِ فَرِحُوا بِمَا عِنْدَهُمْ مِنَ الْعِلْمِ وَحَاقَ بِهِمْ مَا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ
ஆகவே, அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்த போது, அவர்கள் தங்களிடமிருந்த கல்வியைக் கொண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்திருந்தார்கள், எனினும், அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களை அதே கல்வியால் அழித்தோம் / சூழ்ந்து கொண்டோம்.
🔰இந்த உம்மத்தில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் 1300 வருடமாக படித்தது வஹியை மட்டுமே.
◻(முடியுமானால் கொண்டு வாருங்கள் இன்னுமொரு கல்வியை)
🔸️இந்த ஸ்கூல் பாடத்திட்டம்/syllabus இருக்கிறதே, இது 1844ல் போடப்பட்டது. 1844க்கு முன்னால் எந்தவொரு ஸ்கூலும்,யுனிவர்சிட்டியும் சரித்திரத்தில்/history கிடையாது.
ஏன் இந்த பாடத்திட்டம் போடப்பட்டது என்றால் இஸ்லாமிய கிலாஃபத்தை வீழ்த்தி விட்டு கம்யூனிஸத்தை உருவாக்குவதற்காக வேண்டி.
🔹️இதுதான் புகாராவில், சமர்கன்தில், ரஷ்யா உடைய நாடுகளில் சோவியத் யூனியனால் திணிக்கப்பட்டது. இதற்கு எதிராக வந்த அவ்வளவு பேரையும் கொலை செய்தார்கள்.
உலமாக்கள் குரல் தொடுத்தனர் இல்ம்முக்காக علم.
உலமாக்கள் எல்லாம் கொலைச் செய்யப்பட்டார்கள். இந்த உஸ்மானிய கிலாஃபத்தை வீழ்த்துவதற்கு மட்டும் ஒன்றரை கோடி முஸ்லீம்கள் கொலைச் செய்யப்பட்டார்கள், அதில் அனேகமானவர்கள் உலமாக்கள்.😭😢
🔷️அப்போது அல்லாஹு தஃலா எந்த அறிவாள் காஃபிர்களை அழித்தானோ அதுதான் எங்களுக்கு அறிவு. அப்போது அதன் முடிவு எப்படி பட்டதாக இருக்கும்.
அதுதான் நான் சொல்வது- ஸாலிஹான அடியாட்கள் என்றால் நல்ல மக்கள்.
நல்ல மக்கள் என்று முடிவு எடுக்கனும் யார் என்றால்.
🔸️யாரிடம் தவறான தகவல் இல்லையோ அவர்தான் மடிவு எடுக்கனும்.
🔸️யாரிடம் சரியான தகவல் இருக்கிறதோ அவர்கள் சரியான முடிவு எடுப்பார்கள்.
முஹம்மத் (ஸல்) கூறினார்கள்
خَيْرُ النَّاسِ قَرْنِي، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ يَجِيءُ أَقْوَامٌ تَسْبِقُ شَهَادَةُ أَحَدِهِمْ يَمِينَهُ، وَيَمِينُهُ شَهَادَتَهُ
மக்களில் சிறந்த மக்கள் என்னுடைய நூற்றாண்டில் வாழும் (ஸஹாப்பாக்கள்) மக்கள் பின்பு அடுத்து வரும் நூற்றாண்டில், பின்பு அடுத்து வரும் நூற்றாண்டில் வாழும் மக்கள் (300 வருடம்).
அதற்கு பின்னர் சில கூட்டங்கள் உருவெடுப்பார்கள், அவர்களில் ஒருவர் சத்தியம் செய்து ஒன்றைச் சொல்லி பிறகு அவரே அதற்கு எதிராக சாட்சி சொல்லுவார். அவர் சாட்சி சொல்லுவார் பிறகு அவரே அதற்கு எதிராக சத்தியம் செய்வார்.( உளருவான்/பெல்டி அடிப்பான்/வாபஸ் வாங்குவான்).
👆
✔(இதனுடைய விரிவான விளக்கம்
மத்ஹப் பாகம் 01இல்)
இந்த முன்னூறு வருடத்திற்கு உள்ளாள் உள்ள நல்லடியார்கள் யாரை எல்லாம் பின்னால் வந்த ஆயிரம் வருடத்தின் மக்கள் (guarantee)உத்தரவாதம் கொடுத்தார்களோ. அந்த சுத்தமான நல்லடியார்கள்.
-Asad lio
0 Comments