Tntj -வின் வேத website ஆன online pj வில் தப்லீக் தாஃலிம் ஓர் ஆய்வு என்ற தலைப்பின் கீழ் இதை பதிவு செய்துள்ளார்கள் அது இதுவாக உள்ளது.
ஸகரிய்யா சாஹிப் இது பற்றி வந்துள்ள ஒரு ஹதீஸை எழுதிவிட்டு அதற்கு விளக்கவுரை என்ற பெயரில் கதையளந்திருக்கிறார்.
“கஷ்ப் என்னும் அகப்பார்வை உடைய பெரியோர்களுக்கு உறுப்புகளிலிருந்து பாவங்கள் நீங்குவது புலப்படுகிறது. இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களுடைய சம்பவம் பிரபலமானதாகும். உளூச் செய்யும் போது அதன் மூலம் எந்தப்பாவம் கழுவப்படுகிறது என்பதையும் அவர்கள் கண்டு கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தார்கள்.”
(பார்க்க தொழுகையின் சிறப்பு பக்கம் 27)
இதை கூறிவிட்டு சில குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள் அது இதுவாக இருக்கிறது :
1.கஷ்ப் என்பது இருக்கிறதா?
2.அபுஹனிபா (ரஹ்) அவர்களுக்கு இருந்தது என்றால் ஏன் சஹாபாகளுக்கு இருக்கவில்லை?
3.இதை அபுஹனீபா (ரஹ்) அவர்களின் பெயரிலே ஸகரிய்யா (ரஹ்) அவர்கள் இட்டுக்கட்டியுள்ளார்கள்.
4.இதை அபுஹனீபா (ரஹ்) எந்த கிதாப்களில் கூறியுள்ளார்கள்? அல்லது அன்னாரின் மாணவர்கள் யாரேனும் கூறியுள்ளார்களா?
நமது பதில்:
இது முற்றிலும் குருட்டுத்தனமான வாதமாகும். பொய்யும் ,புரட்டுமாகும். இவர்களின் கொள்கையை காப்பாதற்க்கு செய்யும் சூழ்ச்சி இது இனி இதனுடைய விளக்கத்தை பார்ப்போம் !
நம்முடை கொள்கை இல்முல் கைப் என்பது அல்லாஹ்விற்க்கு மட்டுமே உண்டு என்பதாகும். பெரியோர்களுக்கு கஷ்ப் என்னும் அகப்பார்வை உண்டு என்பதாகும் .
கஷ்ப் வேறு இல்முல் கைப் வேறு.
இமாம் இப்னு கையும் ஜவ்ஜீ (ரஹ்):
இல்முல்கைப் கஷப் கிடையாது.
[கிதாப் அர்ரூஹ் 670]
அபூ பக்ர் ரழியள்ளாஹு அன்ஹ் அவர்கள் தனது சொத்திலிருந்து ஆயிஷா ரழியள்ளாஹு அன்ஹா அவர்களுக்கு "காபஹ்" எனுமிடத்தில் 20 வஸக் பேரீத்தங்கணிகள் பெறமுடியுமான ஈத்தமரங்களை அன்பளிப்பாக வழங்கியுருந்தார்கள். அவர்களுக்கு மரண நேரம் சமீபித்த பொழுது ஆயிஷா ரழியள்ளாஹு அன்ஹாவை அழைத்து "என்னருமை மகளே! எனது மரணத்துக்கு பின் மக்களில் செல்வ நிலையில் இருப்பவர்களில் உன்னை விட எனக்கு மிக விருப்பத்துக்குரியவர் வேறு யாரும் இல்லை, அதே போல் வறுமை நிலையில் இருப்பவர்களில் உன்னை விட எனக்கு மிக சகித்துக்கொள்வதற்கு கஷ்டமான வேறு யாரும் இல்லை, நான் உனக்கு 20 வஸக் கணிகள் பெறமுடியுமான பேரீத்த மரங்களை வழங்கியிருந்தேன், நீ அக்கணிகளை பறித்து வசப்படுத்தியிருந்தால் அவை உனக்குரிய சொத்தாக இருந்திருக்கும், (ஆனால்) அது இன்று அனந்தர சொத்தாக ஆகுகின்றது, இவ்விருவரும் உனது இரு சகோதரர்களும் சகோதரிகளும்தான், எனவே அவ்வன்பளிப்பை அல்லாஹ்வின் வேத சட்டப்படி பிரித்துக்கொள்வீராக.
[முவத்தா இமாம் மாலிக் 1089]
இதை ஹதீஸை குறித்து இமாம் கஜ்ஜாலி (ரஹ்) எழுதுகிறார்கள்:
அபூ பக்ர் ரழியள்ளாஹு அன்ஹ் அவர்கள் தங்களது மரண சமயம் தங்களது மகள் ஆயிஷா ரழியள்ளாஹு அன்ஹாவிடம் "இவ்விருவரும் உனது இரு சகோதரர்களும் சகோதரிகளும்தான்" என்றார்கள். அச்சமயம் அன்னாரின் மனைவி கற்பினியாக இருந்தார், அவர் பெற்றதும் கூட ஒரு பெண் குழந்தையைத்தான். பிறக்கவிருப்பது ஒரு பெண் குழந்தை என்பதை அபூ பக்ர் ரழியள்ளாஹு அன்ஹ் ஏற்கனவே அறிந்து வைத்திருந்தார்கள்.
[இஹ்யா 23]
ஆக அபூபக்கர் (ரலி) பிறக்கவிருக்கும் பெண் குழந்தையை அறிந்துள்ளார்கள் இப்போது சொல்லுங்கள் Tntj வினரே அபூபக்கர் (ரலி) அவர்கள் அறிந்திருந்தது இல்முல் கைபா? கஷ்பா?
அடுத்து இந்த Tntj வினர் தாஃலீமில் இந்த விசயம் எந்த கிதாபில் உள்ளது என்று இல்லை என்கிறார்கள் .
மௌலான ஸகரிய்யா (ரஹ்) அவர்கள் அமல்களின் சிறப்பில் இந்த விஷயத்தை போகிற போக்கில் எழுதவில்லை மாறாக மற்ற இமாம்களின் கிதாப்களை படித்து ஆராய்ந்து தான் எழுதியுள்ளார்கள்.
மௌலான இவர்கள் இதை தெளிவாகவௌ எழுதியுள்ளார்கள்:
அல்லாமா ஷஃரானி (ரஹ்) அவர்களின் மீஸான் அல் குப்ராவில் எழுதியுள்ளார்கள்.
[பஜாயிலே அஃமால் உருது]
தமிழிழும் இதே தான் உள்ளது.
கிதாப் மீஸானில் இந்த சம்பவம் வருகிறது :
இமாம்களின் கஷ்ப் உடைய விசயத்து பற்றி கூறும் போது :
ஒரு தடவை இமாமுல் அஃழம் அபூ ஹனீபா ரஹிமஹுள்ளாஹ் அவர்கள் கூபா நகர ஜாமிஃ மஸ்ஜிதின் வுழூ செய்யும் இடத்திற்கு வந்தார்கள். அங்கு ஒரு வாளிபன் வுழூ செய்து கொண்டிருந்தார், அவருடைய உறுப்புகளிலிருந்து சொட்டும் தண்ணீரை இமாமவர்கள் பார்த்ததும் "மகனே! பெற்றோருக்கு நோவினைகள் செய்வதை நிறுத்தி விடு" என்றார்கள். அதற்கு அவ்வாளிபர் தான் தௌபா செய்வதாக சொன்னார்.
இமாமவர்கள் மற்றுமொரு மனிதரின் வுழூவின் தண்ணீரைப்பார்த்ததும் விபசாரத்தில் ஈடுபடுவதை நிறுத்து என்றார்கள். அவரும் தௌபா செய்வதாக சொன்னார்.
இமாமவர்கள் வேறொரு மனிதரின் வுழூவின் தண்ணீரைப்பார்த்ததும் மது அருந்துவதையும், இசை கேட்பதையும் நிறுத்து என்றார்கள்.
[கிதாப் மீஸான் 333]
மேலும் இதே விசயம் பதாவா இமாம் அந்நவவியிலும் உள்ளது.
இப்போது சொல்லுங்கள் இமாமவர்கள் கூறியது இட்டுக்கட்டா pj கூறவது இட்டுக்கட்டா?

0 Comments