Advertisement

இஷா உலுவுடன் 40 ஆண்டுகள் பஜ்ரு தொழுத பெரியாரும் -நமது மறுப்பும்.

பீஜே தனது தப்லீக் தாஃலீம் தொகுப்பு ஓர் ஆய்வு என்ற தலைப்பின் கீழ் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் அது இதுவாக உள்ளது :

அபூ இதாப் ஸல்மீ (ரஹ்) அவர்கள் நாற்பது ஆண்டுகள் வரை இரவு முழுவதும் தொழுது கொண்டே இருந்தார்கள் பகல் முழுவதும் நோன்பு வைத்திருந்தார்கள். (பக்கம் 132)


இமாம் அஹ்மதுப்னுஹம்பல் (ரஹ்) அவர்கள் தினமும் முன்னூறு ரக்அத்கள் நபில் தொழுபவர்களாக இருந்தார்கள். (பக்கம் 132)


இமாம் ஷாபியீ (ரஹ்) அவர்கள் ரமளான் மாதத்தில் தொழுகையில் அறுபது தடவை குர்ஆனை ஓதி முடிப்பார்கள். (பக்கம் 132)

ஹஜ்ரத் ஸயீது இப்னுல் முஸய்யப் (ரஹ்) ஐம்பது ஆண்டுகள் இஷாவையும், சுபுஹையும் ஒரே உளூவைக் கொண்டு தொழுது வந்தார்கள். (பக்கம் 131)


அபுல் முஃதமர் (ரஹ்) அவர்கள் நாற்பது ஆண்டுகள் வரை இவ்விதம் தொழுததாகக் கூறப்பட்டுள்ளது. (பக்கம் 131)


இமாமுல் அஃளம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் முப்பது ஆண்டுகள் அல்லது நாற்பது ஆண்டுகள் அல்லது ஐம்பது ஆண்டுகள் இஷாவுடைய உளூவைக் கொண்டு சுபுஹைத் தொழுததாகக் கூறப்பட்டுள்ளது. (பக்கம் 132)


இமாம் அபூயூசுப் (ரஹ்) அவர்களுக்கிருந்த கல்வி சம்மந்தமான வேலைகள் பளுவைப் பற்றி அனைவருக்கும் தெரியும், அத்துடன் அவர்கள் அந்நாட்டின் பிரதம நீதிபதியாகவும் இருந்து வந்ததால் அது சம்மந்தமான வேலைகளும் ஏராளமாக இருந்தன. அவ்வாறிருந்தும் ஒவ்வொரு நாளும் இருநூறு ரக்அத்கள் நபில் தொழுது வந்தார்கள். (பக்கம் 130)

இதை கூறிவிட்டு இஷாவிற்க்கு செய்த உலுஉடன் சுபுஹ் வரை எப்படி தொழ முடியும் .அவருக்கு சுயதேவைகள் இருக்காதா?

என்றெல்லாம் எழுதியுள்ளார் ஆனால் பஜர் தொழுகையை தொழாத பீஜே அல்லாஹ் மீது வைத்துள்ள அன்பின் காரணமாக இரவெல்லாம் தொழுது வாழ்க்கையை கழித்த எமது முன்னோர்களின் மீது குறை சுமத்திகிறார்கள்.

இனி நமது பதிலை காண்போம்!

நாம் எப்போதும் கூறுவது போல மௌலான ஸகரிய்யா (ரஹ்) அவர்கள் இந்த விசயத்தை போகிறபோக்கில் எழுத வில்லை இமாம்களின் கிதாப்களில் என்ன உள்ளதோ அதை தான் எழுதியுள்ளார்கள்.

சுலைமான் பின் தர்கான் (ரஹ்) அவர்கள் ஜாமியா மஸ்ஜிதின் இமாம் ஆவார்கள் அவர்கள் 40 ஆண்டுகள் இஷாவுக்கு செய்த உலுவுடன் சுபஹை தொழுதுள்ளார்கள்.

[அல்ஹில்யா 3/29]




மேலும் இந்த விசயம் சியர் அஃலாமுன் நுபுலா விலும் இமாம் தஹபி (ரஹ்) அவர்கள் பதிவு செய்துள்ளார்கள்



இமாம் அபுஹனீபா (ரஹ்) அவர்கள் 50 ஆண்டுகள் இஷாவுக்கு செய்த உலுவுடன் சுபஹை தொழுதுள்ளார்கள்.

[மனாகிபுல் இமாம் அபுஹனீபா 21]



இதை பற்றி ஒன்றுமே தெறியாத பீஜே எங்கள் இமாம்களை விமர்ச்சிக்க தகுதியற்றவர்.





Post a Comment

0 Comments