Advertisement

மிருகத்துடன் , பிணத்துடன் - மத்ஹபு குற்றச்சாடிற்க்கு நமது பதில்.

மத்ஹப் மறுப்பாளர்களின் குற்றச்சாட்டு :

பிணத்துடன்  உறவு கொண்டால் தவறில்லை!

மிருகத்துடன் அல்லது செத்த பிணத்துடன் உடலுறவு கொண்டால் குளிப்பு கடமையில்லை.
 (துர்ருல் முக்தார் பாகம் 1 பக்கம் 23)

இதற்கடுத்து பாருங்கள்,

ஒருவன் தனது ஆணுறுப்பை தனது பின் துவாரத்தில் நுழைத்தால், விந்து வெளிப்படாவிட்டால் குளிப்பு கடமையில்லை.  ( துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் 23)

ஒருவன் தன் உறுப்பை எப்படி தன் பின் துவாரத்திற்குள் நுழைத்துக் கொள்ள முடியும்? இதை விட மூடத்தனம் வேறென்ன இருக்கிறது. உறவு கொள்வது குறித்து இஸ்லாம் மார்க்கம் தெளிவான சட்டத்தை வகுத்து வைத்துள்ளது. அதில் சில தடைகளும் உண்டு. இறைவனால் தடை செய்யப்பட்ட முக்கியமான ஒன்று பின் துவாரத்தில் உறவு கொள்ளுதல்.

நமது பதில்:

இமாம் அபுதாவூத் (ரஹ்) அவர்கள்

باب فيمن أتى بهيمة

மிருகத்துடன் புணர்பவன் என்ற தலைப்பின் கீழே பின்வரும் ஹதீஸை பதிவு செய்கிறார்கள்.

من أتى بهيمة فاقتلوه واقتلوها معه 

மிருகத்துடன் புணர்பவனையும் ,அம்மிருகத்தையும் கொன்று விடுங்கள் என ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

( அபூதாபூத் 4:159)



ஒரு மனிதன் தன் ஆசையின் உச்சக் கட்டத்தில் இவ்விதம் செய்து விட்டால் என்ன சட்டம் என்பதை சொல்ல வந்த  இமாம்களின் சொற்கள் ஆபாசமென்றால் மேற்கூறப்பட்ட  ஹதீஸிலும் மேற் கூறப்பட்ட  ஹதீஸிலும் அவ்விதமே வந்துள்ளது.

ஆகையால் நபி (ஸல்) அவர்களின் சொல்லும் ஆபாசம் என்று சொல்ல முன்வருவார்களா? அதையும் மிருகத்தனமானது என்று சொல்வார்களா?

அடுத்து ஒருவன் தன் முன் உறுப்பை  தனது பின் துவாரத்தில் நுழையவைத்தால்.....    ......

 என்ற வாசகத்தை குறித்து மத்ஹப் மறுப்பாளர்கள் ரெம்ப வருத்தப் படுகிறார்கள். எந்த மணிதனாவது இப்படியெல்லாம் சிந்தணை செய்வானா என்றெல்லாம் குமுறுகிறார்..

ஆனால் உலகில் இவ்வாறான விசயம் நிகழ முடியுமா ? முடியாதா? என்பதை சிந்திக்க தவறிவிட்டார்...

 உலகில் இம்மாதிரியான செயல் நிகழவே முடியாது என எவரும் சொல்லவே முடியாது. ஏனெனில் மனிதர்களில் சிலர்  தம் இச்சையில் உச்ச கட்டத்தில் மதியிழந்து  மிருகம் போல் மாறிவிடுவதும் உண்டு.  இம்மாதிரி நேரங்களில் எவரேனும் ஒருவர் இம்மாதிரி செயலை செய்து விட்டால்  அதற்க்குரிய சட்டம் என்ன என்பதை (குளிப்பு எதன் மூலமாகவெல்லாம் கடமையாகிறது என்ற ஹதீஸ்களை அடிப்படையாக வைத்து ) ஆய்வு செய்து எழுதியுள்ளார்கள்.

இதை குறை சொல்பவர்கள் குறைமதியுடனும் குறுகிய பார்வையுடனும் இதனை எடைபோடுகிறார்கள்.!!

மத்ஹபு வழியே மா நபி வழி

Post a Comment

0 Comments