Advertisement

ஹனபி ஷாபிஈயாக மாறினால் தண்டிக்கப்பட வேண்டும் - குற்றச்சாட்டிற்க்கு நமது பதில்.

மத்ஹப் மறுப்பாளரின் குற்றச்சாட்டு:

 ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவர்கள் ஷஃபியாக மாறிவிட்டால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் (துர்ருல் முக்தார் பாகம்2 பக்கம்443)

நமது பதில்:

முதலில் இதனின் மூலப் பிரதியில் மாறிவிட்டால் என்று அரவே இல்லை.

👇 அதில் உள்ள 1 விஷயம் 👇

ارتحل إلى مذهب الشافعي يعزر

இந்த "இர்தஹல" என்ற என்ற வார்த்தைக்கு மாறிவிட்டால் என்ற அர்த்தமில்லை மாறாக இப்படி மொழி பெயர்ப்பது மத்ஹபு மறுப்பாளர்களின் கையாடல்..

ارتحل
என்ற வார்த்தைக்கு அடிப்படை அர்த்தம் அங்கே புறப்பட்டு சென்றால் என்பது தான்.


👇அதில் உள்ள 2 வது விஷயம்👇

மத்ஹபுடைய கிதாபுகள் அணைத்தையும் படிக்கமால் அதில் சில விஷயத்தை மட்டும் வைத்து விவாந்தம் செய்கிறார்கள் கைரமுகல்லிதுகள்.

துர்ருல் உள்ள இந்த வாசகத்திற்க்கு விளக்கம் ரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவெல்லாம் இவர்கள் படித்தால் தானே தெறிந்திறுக்கும்.....

👇 அந்த விளக்கம் பின் வருமாறு. 👇

 : (ارتحل إلى مذهب الشافعي يعزر) 
أي إذا كان ارتحاله لا لغرض محمود شرعاً

ஒருவர் நமது மத்ஹபிருந்து வேறு மத்ஹபிறக்கு நியாயமான காரணத்திற்க்கா ( நிர்பந்தத்திற்க்காக) புறப்பட்டு சென்றிருந்தால் அது புகழப்பட்டது (محمود).


இப்படி தான் மத்ஹப் கிதாபில் உள்ளது.

மத்ஹபு மாறுவதை எந்த மத்ஹபும் தடுக்கவில்லை.மாறாக காரணத்தோடு மத்ஹபுமாறுவதை புகழப்பட்டது என்கிறது..!


மத்ஹபு மாறிவிட்டால் அவன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதாக புரட்டி கூறி காரணத்தோடு மாறினால் அது புகழப்பட வேண்டியது என்ற விளக்கத்தை மறைத்து விட்டார்கள்..!

ஒன்றை மறைத்து மீதத்தை மட்டுமே கூறுவது தான் மத்ஹபு மறுப்பாளர்களின் கையாடல்.!

Post a Comment

0 Comments