மத்ஹப் மறுப்பாளர்களின் குற்றச்சாட்டு :
நாய் அல்லது பூனையை இச்சு கொட்டி அன்புடன் அழைத்தாலோ, அல்லது கழுதையை விரட்டினாலோ, தொழுகை வீணாகாது! காரணம், இது எழுத்து வடிவிலான வார்த்தை அல்ல!
(துர்ருல் முக்தார் பக்கம் 614 )
நமது பதில்:
தொழுகையைப் பாழாக்கும் செயல்கள் ,பேச்சுக்கள் எவை? என்ற கேள்விக்கு கீழ்கண்ட நபிமொழிகளின் அடிப்படையில் சொல்லப்பட்ட பதில்கள் தான் இவை.
தொழுகையில் தும்மிய ஒருவருக்கு மற்றொரு ஸஹாபி 'யர்ஹமுகல்லாஹ்' என்று வாழ்த்துக் கூறினார். அவர் இவ்வாறு கூறியவுடன் அருகில் தொழுது கொண்டிருந்த ஸஹாபாக்களில் சிலர் தங்கள் கைகளினால் தங்கள் தொடைகளில் அடித்து (பேசக்கூடாது) என உணர்த்தினார்கள்.
ان هده الصلوه لا يصلح فيها شيء من كلام الناس
(مسلم 1/203)
தொழுகை முடிந்தவுடன் அவரிடம் " இந்தத் தொழுகையில் மனிதர்களின் பேச்சுக்களிலிருந்துஎதுவும் கூடாது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் (முஸ்லிம்,மிர்காத்)
علي قال : كان لي من رسول الله صلى الله عليه وسلم مدخلان بالليل والنهار وكنت إذا دخلت عليه وهو يصلي يتنحنح لي
" நான் தினமும் நபி (ஸல்) அவர்களிடம் செல்ல எனக்கு 2 நேரங்கள் இருந்தன . ஒன்று பகலில் மற்றொன்று இரவில் . நான் வரும் பொழுது தொழுது கொண்டிந்தால் எனக்காக (அனுமதி தரும் வகையில்) கணைப்பார்" என்று அலி (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(நஸயீ ,அஹ்மது)
عائشة رضي الله عنها قالت: (استفتحت الباب ورسول الله صلى الله عليه وسلم يصلي تطوعاً والباب على القبلة، فمشى عن يمينه أو عن يساره ففتح الباب ثم رجع إلى مصلاه)
நபி (ஸல்) அவர்கள் நபில் தொழுது கொண்டிருக்கும் போது நான் வந்தேன் . கதவு மூடியிருந்தது .கதவைத் தட்டினேன் ! நபியவர்கள் (ஸல்) நடந்து வந்து கதவைத் திறந்து விட்டு பின்பு தொழுமிடத்திற்குத் திரும்பி விட்டார்கள். அச்சமயம் கதவு கிப்லாத் திசையில்" என ஆயிஷா (ரலி) கூறினார்கள்.
( அஹ்மது, சுனன் குப்ரா)
எனவே எழுத்துக்கள் இல்லா சப்தத்தினால் தொழுகை பாழாகுமா? ஆகாதா? என்ற வினாவிற்க்கு 'பாழாகாது' என்று சட்டம் சொல்லப்பட்டுள்ளது .அதுவும் நிர்பந்தமான நிலையில் தான்.
ஒருவன் திறந்த வெளியில் தொழுகிறான் .நாயோ, கழுதையோ அவனருகே வருகிறது. அவன் சும்மா நின்றால் அதனால் இவனுக்கு சிரமம் வந்து விடலாம் .இப்போது என்ன செய்வது? என்ற கேள்விக்கு உச்சரிப்பு இல்லாத வார்த்தையால் சப்தமிட்டு விரட்டலாம் என்று நபிமொழியின் அடிப்படையில் கூறப்பட்டுள்ளது.





0 Comments