Advertisement

தலைப்பு- மத்ஹப் مذهب பாகம் 01


முஹம்மத் (ஸல்) கூறினார்கள் :

خَيْرُ النَّاسِ قَرْنِي، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ يَجِيءُ أَقْوَامٌ تَسْبِقُ شَهَادَةُ أَحَدِهِمْ يَمِينَهُ، وَيَمِينُهُ شَهَادَتَهُ

மக்களில் சிறந்த மக்கள் என்னுடைய நூற்றாண்டில் வாழும் (ஸஹாப்பாக்கள்) மக்கள் பின்பு அடுத்து வரும் நூற்றாண்டில், பின்பு அடுத்து வரும் நூற்றாண்டில் வாழும் மக்கள் (300 வருடம்).
அதற்கு பின்னர் சில கூட்டங்கள் உருவெடுப்பார்கள், அவர்களில் ஒருவர் சத்தியம் செய்து ஒன்றைச் சொல்லி பிறகு அவரே அதற்கு எதிராக சாட்சி சொல்லுவார். அவர் சாட்சி சொல்லுவார் பிறகு அவரே அதற்கு எதிராக சத்தியம் செய்வார்.( உளருவான்/பெல்டி அடிப்பான்/வாபஸ் வாங்குவான்).

(இந்த ஹதீஸ் புகாரி முஸ்லிம் போன்ற கிதாப்புகளில் பதியப்பட்டுள்ளது)

நான்கு மத்ஹப்களுடைய இமாம்களும் இந்த மூன்று நூற்றாண்டுகளுக்கு உள்ளாள் உள்ள மக்கள்தான்.

💎இமாம் அபூ ஹனீஃபா ( ஹி.80-150)
💎இமாம் மாலிக் ( ஹி.94-179)
💎இமாம் ஷாஃபி ( ஹி.150-204)
💎இமாம் அஹ்மத் இப்னு ஹம்பழ் ( ஹி164-241)

ஹிஜ்ரி 241 இல் இருந்து 1267 வரை. 1026 வருடமாக இந்த நான்கு மத்ஹப்பில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றியே இந்த உம்மத் வாழ்ந்தார்கள்.

இந்த 1026 வருடங்களில் நான்கு மத்ஹப்பில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றி போறது கூடாதென்றோ தேவை இல்லை என்றோ பேசிய ஒரு முஸ்லிம் வாழ்ந்தது இல்லை.

  💥*முடியுமானால் இந்த 1000 வருடம் சரித்திரத்தில் மத்ஹப்புக்கு எதிராக பேசின ஒருவரைக் கொண்டு வாருங்கள்.

💎💎💎

 இந்த உம்மத் 100வருடம் ஒரு விஷயத்தில் ஒன்று சேர்ந்தால் அதற்கு இஜ்மா எனப்படும்.

💥*ஓருவர் உம்மத்துடைய இஜ்மாவை மறுக்கும் பட்சத்தில் அவர் காஃபிர் ( كفر) என உலமாக்களின் ஏகோபித்த முடிவாகும்.

அப்போ 1000 வருடம் ஒன்று சேர்ந்ததை மறுக்கும் நபருக்கு என்ன சொல்வது?

💎💎💎

وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطاً لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيداً ) البقرة/143

அல்லாஹ்(தஃலா) கூறுகிறான் -
உங்களை நான் நடுநிலையான உம்மத்தாக ஆக்கி இருக்கிறோம், நீங்கள் மக்களுக்கு சாட்சி சொல்லுவதற்காக .

மக்களுடைய சாட்சி அல்லாஹ் இடத்தில் கபூல்.

300 வருடத்திற்கு உள்ளாள் உள்ள மக்களில் நல்லடியார்களுக்குகாக வேன்டி பின்னர் வந்த 1000 வருடத்தின் நல்லடியார்கள் சாட்சி சொல்லியிருக்கிறார்கள்.

இது அல்லாஹ் இடத்தில் கபூல் இல்லையா?

💎💎💎

 وَمَا كَانَ اللَّهُ لِيُضِلَّ قَوْمًا بَعْدَ إِذْ هَدَاهُمْ حَتَّىٰ يُبَيِّنَ لَهُمْ مَا يَتَّقُونَ ۚ إِنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ

அல்லாஹ்(தஃலா) கூறுகிறான்-
எந்தவொரு சமுதாயத்திற்கும் அல்லாஹ் நேர்வழி காட்டிய பின் அவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டியவைகளை அவர்களுக்கு தெளிவுபடுத்தும் வரை அவர்களை அவன் வழி கெடுப்பவனாக இல்லை. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் அறிந்தவன்.

💥*அப்போ உம்மத்துக்கு ரஸூலுல்லாஹ்வை கொடுத்து நேர் வழி காட்டி விட்டு மத்ஹப்பை கொடுத்து வழிகேட்டில் போட்டானா?

💥*அப்படியா சொல்ல போராங்க...?

💥*முழு முஸ்லிம் சமுதாயமும் மத்ஹப்பில்.

💥*மத்ஹப் வழிகேடு என்றால் முழு உம்மத்தும்  வழிகேட்டில்.

💥* அப்போ அல்லாஹ்வின் மீது படுதூர் சொல்ரான்.

💥*யார் மத்ஹப்பில் கைவைக்கிறாரோ அவர் அல்லாஹ்வின் மீது படுதூர் சொல்ரார்.

💎💎💎

இமாம்களுக்கு கை நீட்டும் ஆட்கள் உருவாகினது (ஆகிருஸ் ஸமான்) கடைசி காலத்தில்.

 ‏إذا فعلت أمتي خمس عشرة خصلة حل بها البلاء 

என்னுடைய உம்மத் 15 விஷயங்களில் ஈடுபடுவார்கள் என்றால் அவர்களுக்கு சோதனை ஹலால் ஆகிவிடும். கடைசி விசயம் சொன்னார்கள் .

ولعن آخر هذه الأمة أولها ‏ 

இந்த உம்மத்துடைய கடைசி  ஆரம்பத்தை சாபம் இடுவார்கள்.

-Asad lio

Post a Comment

0 Comments