Advertisement

தலைப்பு- மத்ஹப் مذهب பாகம் 02.



இந்த தக்லீது தான் இண்டைலிருந்து அன்டவரைக்கும் (ஸஹாப்பாக்கள் வரைக்கும்).

💥ஸஹாபாக்களில் ஏழு மத்ஹப்.

நன்றாக விளங்கிக் கொள்ளுங்கள்.

🌷இமாம் அல் ஹாஃபிஸ் இப்னு ஹஜர் அல் அஸ்களானி( ابن حجر العسقلاني‎‎) இஸாபா உடைய ஆரம்பத்தில் பேசுகிறார்.
இதை எடுத்துப் பாருங்கள் ஒவ்வொருவரும்.

ஸஹாபாக்களில் முழுமையாக நிறைய ஃபத்வாக்கள் கொடுத்தவர்கள் ஏழு பேர்.

💎01.உமர் இப்னு கத்தாப் (ரலி)
💎02.அலி இப்னு அபீ தாலிப் (ரலி)
💎03.அப்துல்லா இப்னு மஸ்ஹூத் (ரலி)
💎04.அப்துல்லா இப்னு அப்பாஸ் (ரலி)
💎05.அப்துல்லா இப்னு உமர் (ரலி)
💎06.செzய்த் இப்னு ஸாபித் (ரலி)
💎07.ஆயிஷா பின்த் அபீ பக்ர் (ரலி)

இவர்களை மீறி யாரும் ஃபத்வா கொடுக்க மாட்டார்கள்.

💥இமாம் புகாரி அவர்கள் புகாரியில் كتاب الفرائض கீழ் பதிவு செய்கிறார்கள்.

கூஃபாவிலிருந்து ஒரு கூட்டம் வந்தார்கள் அபூ மூஸா அல் அஷ்அரீயிடம் (ரலி) சட்டம் கேட்பதற்கு.
அவர்கள் சொன்னாங்க சட்டம் இப்படித்தான் இருக்கும், நீங்கள் போயி அப்துல்லா இப்னு மஸ்ஹூத் (ரலி) அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். கேட்டுவிட்டு என்னிடமும் வந்து சொல்லிட்டு போங்க, நான் யாருக்கும் வித்தியாசமாக ஃபத்வா கொடுக்க கூடாது, என்று அஞ்சினார்கள்.

🌷(இங்கே கவனிக்க வேண்டியது ஸஹாபாக்களின் பணிவு, அபூ மூஸா அல் அஷ்அரீய் (ரலி)
 அவர்கள் ஃபத்வாக்குறிய ஸஹாபி. அவர்களுக்கு அந்த தகமை இருந்தது. )

அதற்கு பின்னர் மக்கள் போய் வந்து சொன்னார்கள்.
அப்போது அந்த நேரத்தில் அபூ மூஸா அல் அஷ்அரீய் (ரலி) கூறினார்கள்

 لا تسألوني ما دام هذا الحبر فيكم

இந்த அறிவுக் கடல் உங்களுடன் வாழும் காலம் எல்லாம் என்னிடத்தில் எந்தவொரு சட்டமும் கேட்கவேண்டாம் என்றார்கள்.

💫ஏழு பேர் இவர்கள்.

அதுவல்லாமல் இன்னும் இருபது பேர் இருக்கிறார்கள். அவர்களில் தான்
அபூ மூஸா அல் அஷ்அரீய் (ரலி) , அபூ பக்ர் சித்தீக் (ரலி), அபூ தர்தா (ரலி), முஆத் இப்னு ஜபல் (ரலி) போன்றவர்கள். இந்த உம்மத்துடைய பிரம்மாண்டமான உலமாக்கள் இவர்கள்.

இவர்கள் இருபது பேரும் அந்த ஏழு பேர்களுக்கு பிறகு தான்.

அதற்கு பின்னால் இன்னும் 100/110 பேர் இருக்கிறார்கள் வாழ்க்கையில் ஒரு அல்லது இருமுறை ஃபத்வா கொடுத்தவர்கள்.

💎முழு 120000 ஸஹாபாக்களில் 130 சொச்சம் பேர் தான் ஃபத்வா கொடுத்தார்கள். மற்ற எல்லோரும் பின்பற்றி போனார்கள்.

💣குறிப்பு-(எங்களைப் போன்று யாரும் அங்கே அடம்பிடிக்கவில்லை, நானும் ரஸூலுல்லாஹ் உடைய மானவர் தான், எனக்கு தெரியாத குர்ஆன் சுன்னாவா, அவர் யார் இவர் யார்).

🌷அதனால் உம்மத்தை மூன்று நூற்றாண்டுகளுக்கு  உள்ளாள் கொண்டு போய் சேருங்கள்.

💥ஏனென்றால் அதற்கு பின்னர் வரக்கூடிய மக்களைப் பற்றி சொன்னார்கள் நபி (ஸல்)

ثُمَّ يَجِيءُ أَقْوَامٌ تَسْبِقُ شَهَادَةُ أَحَدِهِمْ يَمِينَهُ، وَيَمِينُهُ شَهَادَتَهُ

அதற்கு பின்னர் சில கூட்டங்கள் உருவெடுப்பார்கள், அவர்களில் ஒருவர் சத்தியம் செய்து ஒன்றைச் சொல்லி பிறகு அவரே அதற்கு எதிராக சாட்சி சொல்லுவார். அவர் சாட்சி சொல்லுவார் பிறகு அவரே அதற்கு எதிராக சத்தியம் செய்வார்.( உளருவான்/பெல்டி அடிப்பான்/வாபஸ் வாங்குவான்).

💥யாருக்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு உள்ளாள் தொடர்பு இல்லையோ அவன் மார்க்கத்தை சொல்ல மாட்டான் உளருவான்.

💥இன்றைக்கு ஒன்றைச் சொல்லி பிறகு நாளை இன்னும் ஒன்றைச் சொல்லுவான்.

💥உம்மத் வழி கேட்டில் போன பிறகு சொல்லுவார்கள் ஆஹ் எங்களுக்கு தெரியாதே, இப்போ தானே ஹதீஸைக் கண்டோம்.

💥நடக்குதா இல்லையா?

🌷அதனால் உம்மத்தை மூன்று நூற்றாண்டுகளுக்கு  உள்ளாள் கொண்டு போய் சேருங்கள், மத்ஹபுக்கு உள்ளாள் கொண்டு போய் சேருங்கள்.

-Asad Lio

Post a Comment

0 Comments