Advertisement

தலைப்பு- மத்ஹப் مذهب பாகம் 03.



🌷ஸுன்னா வேறு ஹதீஸ் வேறு.

💥ஹதீஸைப் பின்பற்றுங்கள் என்று எங்கேயுமே இல்லை.

நன்றாக விளங்கிக் கொள்ளுங்கள்.
நான் இதை ஊன்றி சொல்லுகிறேன்.

💣ஏனென்றால் ஹதீஸைப் பின்பற்றுங்க.....
என்று சொல்லி தான் உம்மத்தை வழி கெடுத்தார்கள்.
இந்தா பாரு புகாரியில் வருது அபூ தாவுத்ல வருது என்று தான் வழி கெடுத்தார்கள்.

🌷ஹதீஸ் வேறு ஸுன்னா வேறு.

💫எல்லா ஹதீஸும் ஸுன்னா இல்லை
                  ஆனால்
💫எல்லா ஸுன்னாவும் ஹதீஸில் இருக்கு.

நன்றாக விளங்கிக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

⭕அப்போ ஸுன்னா என்றால் என்ன?
⭕ஹதீஸ் என்றால் என்ன?

🔰ஹதீஸ் என்றால்-
அறிவிக்கப்பட்ட செய்திகளில் நபி (ஸல்) அவர்களுடைய சொல் செயல் அங்கீகாரம் என்று சொல்லப்படும் அவ்வளவும் ஹதீஸ்.

🔰ஸுன்னா என்றால்-
ஹதீஸில் இருந்து நிரூபிக்கப் பட்டது ஸுன்னா.

⚠️இலகுவான உதாரணம்-
நபி(ஸல்) அவர்களுடைய செயல்தான் பதினொரு திருமணம். ஒரேநேரத்தில் ஒன்பது மனைவிமார்கள்.

⏺ஸுன்னாவா? இல்லை ❌
⏺ஹதீஸா? ஆம் ✔

⚠️இன்னுமொரு உதாரணம்-

🔴1.அபூ தாவுத், திர்மிதி யில் ஒரு ஹதீஸ் பதிவாகியுள்ளது.
இதனுடைய (ஸனத்) அறிவிப்பாளர் வரிசை மிகவும் ஸஹீஹ் ஆனது.
நபி(ஸல்) அவர்கள் சொன்னாங்க... என்று பதிவாகியுள்ளது.

قال النبي صلى الله عليه وسلم: "إذا سجد أحدكم فلا يبرك كما يبرك البعير، وليضع يديه قبل ركبتيه
உங்களில் ஒருவர் ஸுஜூத் செய்யும் போது.
நீங்கள் ஒட்டகம் படுக்கிறது போல ஸுஜூத் செய்ய வேண்டாம்.
முதலாவது கையை வைத்து பிறகு முட்டங்காலை வைக்கவும்.

இது ஹதீஸ்.

🔵2.இதே அபூ தாவுத், திர்மிதி யில் இன்னுமொரு ஹதீஸ் பதிவாகியுள்ளது.

رأيت رسول الله صلى الله عليه وسلم إذا سجد وضع ركبتيه قبل يديه
 நபி(ஸல்) ஸுஜூத்துக்கு போகும் போது முதலாவது
முட்டங்காலை வைப்பார்கள் அதற்கு பின்னர் கையை வைப்பார்கள்.

ஹதீஸ் (🔴1.) சொல்லுது முதலாவது கையை வைத்து பிறகு முட்டங்காலை வைக்கனும்.
ஆனால்  நபி(ஸல்) அவர்களின் செயல் என்னவென்றால் முதலில் முட்டங்காலை வைத்து பிறகு கையை வைப்பது.

ஹதீஸ் (🔴1.) இல் இரண்டு பகுதிகள் உள்ளன.
முதலாவது-
நீங்கள் ஒட்டகம் படுக்கிறது போல ஸுஜூத் செய்ய வேண்டாம்.
இரண்டாவது-
முதலாவது கையை வைத்து பிறகு முட்டங்காலை வைக்கவும்.

⏺ஒட்டகம் படுக்கைக்கு செல்லும் போது முன்னங்காளை உடைக்கும். அதில் மூன்று ஜொய்ன்ட் இருக்கிறது. முதலாவது ஜொய்ன்டை உடைத்து குத்திப் போட்டு பிறகு உள்ளாள் மடித்து முன் பகுதியை முழுமையாக இறக்கிய பிறகு தான் பின் பகுதியை வைக்கும்.

💥அப்போ இது மாதிரி ஸுஜூத் செய்ய வேண்டாம் என்றால்! முதலாவது நீங்கள் கையை வைக்க வேண்டாம்.

💥விளங்குதா!

ஆனால் அதே ஹதீஸுடைய பின் வாசகம் சொல்லுது முதலாவது கையை வையுங்களென்று.

ஹதீஸுடைய முன் வாசகத்திற்கு பின் வாசகம் முரண்படுது.

💥இந்த ஹதீஸுடைய அறிவிப்பாளர் தொடர் மிகவும் பலமானது. ஆனால் வாசகம் முன்பின் முரண்படுது.
எனவே இந்த வார்த்தை நபி(ஸல்) அவர்களின் வார்த்தை அல்ல.
💣( நபி(ஸல்) அவர்கள் முன்பின் முரணாக பேச/ உளர மாட்டார்கள்.

💎எனவே ஸதீஸ் கலை வல்லுனர்கள் தீர்ப்பு செய்தார்கள் இது லயீஃபான ஹதீஸ் என்று. அதனுடைய அறிவிப்பாளர் தொடர் பலமான நிலையில் அதனுடைய வாசகம் பிறந்டதின் காரணமாக அதற்கு பலவீனமான ஹதீஸ் என்று தீர்ப்பு செய்துவிட்டார்கள்.

🌷எனவே இதில் நபி(ஸல்) அவர்களுடைய சொல்லை அல்ல செயலை வைத்து ஸுன்னா அமைக்கப்பட்டுள்ளது.

💣இப்போ இது இரண்டுமே(🔴1. & 🔵2.) ஹதீஸில் உள்ளது.

முதலாவது ஹதீஸ்(🔴1.) ஹதீஸாக இருக்கிறது ஆனால் ஸுன்னா இல்லை.

இரண்டாவது ஹதீஸ்(⭕2.) ஹதீஸாகவும் இருக்கிறது ஸுன்னாவாகவும் இருக்கிறது.

இப்போ இந்த (🔴1.) ஹதீஸை ஒரு பாமர மனிதனிடத்தில் காட்டி, இந்தா பாருப்பா...ஹதீஸ்ல வருது. இந்த பெளத்து பொழப்புக்கு சாகுரான்வள் ஒரு கூட்டம்,
என்று சொல்லி திருப்பினார்கள் மத்ஹப்பில் இருந்து.
இதெல்லாம் பாவித்தது பத்ஹப்பில் இருந்து உம்மத்தை கழட்டி விட.

💎💥குறிப்பு- யாராவது ஹதீஸை கொண்டுவந்தால் அவர்களிடத்தில் சொல்லுங்க.... முடிவு எடுக்கிற ஆள் நானும் இல்ல நீங்களும் இல்ல. முடிவு எடுத்துட்டாங்க நாங்க இப்போ அமல் செய்து கொண்டிருக்கிறோம் என்று  தைரியமாக சொல்லுங்க.

-Asad Lio

Post a Comment

0 Comments