Advertisement

தலைப்பு- மத்ஹப் مذهب பாகம் 04.


🌷ஸுன்னா வேறு ஹதீஸ் வேறு.
       தொடர்கிறது.......




🔰உமர் (ரலி) அவர்களுடைய காலத்தில் ஒரு பிரச்சனை வந்தது.

💎சில ஸஹாபாக்கள் சொன்னார்கள் இந்திரியம் வெளியாகினாள் தான் குளிப்புக் கடமை என்று.
அவர்கள் ஒரு அறிவிப்பை முன்வைத்தார்கள்.
(இந்த ஹதீஸ் முஸ்லிமில் வருகிறது)

الماء من الماء

💎முஹாஜிரீன்களிள் அனேகமானவர்களும் அன்ஸாரிகளிள் ஒரு பகுதியினர்களும் சொன்னார்கள்....இல்லை இல்லை
நபி(ஸல்) அவர்கள் கத்னா செய்யப்பட்ட உறுப்புகள் இரண்டும் சந்தித்தாலே குளிப்பதை கடமையாக கருதுவார்கள்.
நபி(ஸல்) அவர்களின் வார்த்தையை முற்படுத்தினார்கள்.

إذا التقى الختانان فقد وجب الغسل

▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️
💣இப்போது இந்த பிரச்சனை பெரிதாகி அஸ்ரத் உமர் (ரலி) அவர்களிடத்தில் வந்தது.

💎உமர் (ரலி) அவர்கள் அஸ்ரத் உர்வத் இப்னு ஸுபைர் (ரலி) அவர்களை அனுப்பி வைத்தார்கள் போயி அஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்குமாறு.

⏺(உர்வத் இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களுடைய சொந்த சகோதரி அஸ்மா (ரலி) வின் மகன்)

💎அஸ்ரத் ஆயிஷா (ரலி) சொன்னார்கள் நபி(ஸல்) அவர்கள் கத்னா செய்யப்பட்ட உறுப்புகள் இரண்டும் சந்தித்தாலே குளிப்பதை கடமையாக கருதுவார்கள் என்று.

அப்போது முடிவாகிவிட்டது ஸுன்னா - கத்னா செய்யப்பட்ட உறுப்புகள் இரண்டும் சந்தித்தாலே குளிப்பு கடமை என்று. ✔

💣இப்போது இந்த அல் மாஊ மினல் மா
 (الماء من الماء)
என்ற ஹதீஸ் முஸ்லிமில் இருக்கிறது.

🔴"ஆஹ் முஸ்லிம் ல வருகிற ஹதீஸ், அமல் செய்துவிட்டு போங்க"

அப்படியா?  ❌

🌷ஸுன்னா வேறு ஹதீஸ் வேறு🌷

🔵எங்கே எல்லாம் பின்பற்றுங்கள் என்று சொல்லப்படுகிறதோ ஸுன்னாவை பின்பற்றுமாறு சொல்லப்படுகிறது,
ஹதீஸை அல்ல. ❌

🔵அடிக்கடி மத்ஹப்புக்கு எதிராக பேசுபவர்கள் சொல்லக்கூடிய ஹதீஸ்

تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما : كتاب الله ، وسنة نبيه - صلى الله عليه وسلم - . 

உங்களிடம் நான் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கிறேன். அதனை நீங்கள் பற்றிப்பிடிக்கும் காலம் எல்லாம் வழி தவற மாட்டீர்கள். அல்லாஹ் உடைய வேதமும் என்னுடைய ஸுன்னாவும். (ஹதீஸ் அல்ல)

💎வஹீயில் இருந்து ஷரீஅத் ஆக்கப்பட்டது ஸுன்னா.

💎அதனால் மத்ஹப்பில் ஒரு சட்டம் இருக்கும் ஹதீஸை காட்டுவார்கள் இன்னொரு சட்டம் என்று.

⭕விளங்கியதா❗

💥ஏன் இந்த ஸுன்னாவயும் ஹதீஸயும் பிரித்து பேசினேன் என்றால்.

🔴உம்மத்தை மத்ஹப்பில் இருந்து பிரிக்கிறதுக்கு பாவித்த ஆயுதம்...... ஹதீஸ்

💥அப்போது இதில் யதார்த்தம் என்னவென்று விளங்கிக் கொள்ள வேண்டும்.

💥அதனால் சிலர் கொண்டு வருவார்கள் "இந்தா பார் ஹதீஸில் இருக்கிறது" ஆனால் மத்ஹப் அதற்கு மாற்றமாக இருக்கும். அப்போது நீங்கள் விளங்கிக் கொள்ளுங்கள் கட்டாயமாக இவர் கொண்டு வந்த ஹதீஸ் ஸுன்னாவாக இருக்காது. ஸுன்னா என்றது வேறு ஒரு ஹதீஸில் இருக்கும். அதை யார் கொண்டு வந்தாலும் சரி. 

Post a Comment

0 Comments