🌷ஸுன்னா என்றால் என்ன?
ஹதீஸில் இருந்து நிரூபிக்கப் படுகிற செய்திகள் தான் ஸுன்னா.
💎இந்த ஸுன்னா இருக்கிறதே.................
இது ஸzமானுக்கு ஸzமான் வித்தியாசமாகும்.
💣ஆச்சரியமாக இருக்கிறதா?
❗❗❗❗❗❗❗❗❗❗❗❗❗❗
⭕நபி (ஸல்) அவர்களோடு ஸஹாபாக்கள் வாழும் போது ஸுன்னா எது?
▫️நபி (ஸல்) அவர்களிடத்தில் எடுக்கப்பட்ட தீன்(دين) தான் ஸுன்னா.
⭕நபி (ஸல்) அவர்கள் இந்த உலகத்தை விட்டுப் பிரியும் போது
▫️1.ஸஹாபாக்களுக்கு எது ஸுன்னா?
▫️2.உம்மத்துக்கு எது ஸுன்னா?
(இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன)
◻◻◻◻◻◻◻◻◻◻◻◻◻◻◻
💥முஸ்லிமில் ஒரு ஹதீஸ் பதிவாகியுள்ளது. இந்த ஹதீஸ் திர்மிதி, அபூ தாவுத் போன்ற நிறைய கிதாப்புகளிள் இருக்கிறது.
وعظنا رسول الله صلى الله عليه وسلم موعظة بليغة وجلت منها القلوب، وذرفت منها العيون، ، فقلنا: يا رسول الله! كأنها موعظة مودع فأوصنا.
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் ஒரு உபதேசம் செய்தார்கள். உள்ளங்கள் எல்லாம் நடுங்கியது. கண்களால் கண்ணீர் கொட்டியது.
ஸஹாபாக்கள் சொன்னார்கள்... யா ரஸூலுல்லா!
நீங்கள் துன்யாவை விட்டும் பிரியப் போறது போல் இருக்கிறதே!
(ஒரு பிரியாவிடை யாளருடைய உபதேசம் போல் இருக்கிறதே!)
நீங்கள் பிரிந்து விட்டீர்கள் என்றால் நாங்கள் எப்படி நடக்க வேண்டும் என்று வஸீஅத் செய்யுங்கள்.
நபி (ஸல்) சொன்னார்கள் -
قال: أوصيكم بتقوى الله
நீங்கள் அல்லாஹ் வைப் பயந்துக் கொள்ளுங்கள்.
والسمع والطاعة وإن تأمر عليكم عبد حبشي
ஒரு ஹபஷி அடிமை உங்களுக்கு அமீராக ஆக்கப்பட்டாலும் நீங்கள் கேட்டோம் வழிப்பட்டோம் என்று வழிப்படுங்கள்.
*( கேட்டோம் முறன்பட்டோம் அல்ல)
சொல்லிட்டு சொன்னார்கள்.
فإنه من يعش منكم فسيرى اختلافاً كثيراً
உங்களில் யார் எல்லாம் எனக்குப் பின்னால் வாழ்வீர்களோ, நிறைய முரண்பாடுகளை சந்திப்பீர்கள்.
فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي،
எனவே நீங்கள் என்னுடைய ஸுன்னாவை பற்றிப் பிடித்து கொள்ளுங்கள் நேர் வழி நடக்கின்ற குலஃபாஉர் ராஷிதூன் ( خلفای راشدین)களுடைய ஸுன்னாவயும் பின்பற்றுங்கள்.
عضوا عليها بالنواجذ،
அவற்றை நீங்கள் கடைவாய்ப் பற்களால் கடித்துப் பிடித்துக்கொள்ளுங்கள்.
💥நபி (ஸல்) பிரிந்த உடனே ஸஹாபாக்களுக்கு எது ஸுன்னா?
நபி (ஸல்) அவர்களுடைய ஸுன்னாவோடு குலஃபாஉர் ராஷிதூன் களுடைய ஸுன்னா.
(அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) & அலி (ரலி))
💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎
💣💣💣
இப்போது சொல்லுங்கள் 'குர்ஆன்'
🔴ஸுன்னாவா?
🔴ஃபித்ஆவா?
💣💣💣
இப்போது வாங்க..............
நாங்கள் பார்க்கிற 'குர்ஆன்'
🔴ஸுன்னாவா?
🔴ஃபித்ஆவா?
பேசுங்கள்❗
ஸுன்னா ஆகியதா இல்லையா❗
💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎
🔰இப்போது குர்ஆனை ஒன்று சேர்த்தது யார்?
💫ஸஹாபாக்கள்
🔰தொகுத்து புத்தகம் ஆக்கியது யார்?
💫 அஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களின் முடிவில், அஸ்ரத் செzய்த் இப்னு ஸாபித் (ரலி) ஒன்று சேர்த்து,
அஸ்ரத் உமர் (ரலி) உடைய மஷூராவில் செய்யப்பட்டது.
அஸ்ரத் உஸ்மான் (ரலி) அவர்களுடைய ஆட்சி காலத்தில் இந்த இதே தொகுக்கப்பட்ட குர்ஆன் 80 (எண்பது) பிரதிகளாக ஆக்கப்பட்டு, இஸ்லாமிய கவர்னர்கள் 80பேர் ஆட்சி செய்துகொண்டு இருந்தார்கள், அந்த 80பேருக்கும் அனுப்பப்பட்டது.
ஆங்காங்கே சுயமாக யார் எல்லாம் கேட்டதும் பேசியதும் 'குர்ஆன்' என்று எழுதி வைத்திருந்தார்களோ, அவைகளை எல்லாம் சுட்டெரிக்குமாறும், இதனுடைய பிரதியை குர்ஆனாக எடுக்குமாறும் கட்டளையிட்டார்கள்.
🔰'குர்ஆனை' ஒன்று சேர்க்குமாறு மஷூரா உமர் (ரலி) உடையது.
🔰ஒன்று சேர்த்தது அபூபக்கர் (ரலி).
🔰முழு உலகத்துக்கும் வினியோகம் செய்தது உஸ்மான் (ரலி).
⭕இப்போது குலஃபாஉர் ராஷிதூன் களுடைய ஸுன்னா ஸுன்னாவாகியது.
⭕இப்போது குர்ஆன் ஸுன்னாவுக்குக் கீழ் வந்து விட்டது.
💥அப்போது நபி (ஸல்) அவர்கள் இந்த உம்மத்தை விட்டு பிரிந்த உடனேயே ஸுன்னா மாறுபடுகிறது. எங்கே போகிறது?...... நபி (ஸல்) அவர்களுடைய ஸுன்னாவோடு குலஃபாஉர் ராஷிதூன் களுடைய ஸுன்னா.
💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎
⏺மூன்றாவது கட்டம்
⭕ஸஹாபாக்களோடு தாஃபியீன்கள் வாழும் போது ஸுன்னா எது?
🔰முஸ்லிமில் ஹதீஸ் பதிவாகியுள்ளது.
நபி (ஸல்) சொன்னார்கள்-
وَأَنَا أَمَنَةٌ لِأَصْحَابِي، فَإِذَا ذَهَبْتُ أَتَى أَصْحَابِي مَا يُوعَدُونَ، وَأَصْحَابِي أَمَنَةٌ لِأُمَّتِي، فَإِذَا ذَهَبَ أَصْحَابِي أَتَى أُمَّتِي مَا يُوعَدُونَ
நான் என்னுடைய ஸஹாபாக்களுடைய பாதுகாவலன். (என் மூலம் தான் ஸஹாபாக்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்). நான் சொல்வது தான் ஸஹாபாக்களுக்கு தீன் (دين).
நான் எப்போது இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து விடுவேனோ, என்னுடைய தோழர்களுக்கு வாக்களிக்கப்பட்டவை வரும்.(இதை கொண்டு நாடப்படுவது என்னவென்றால் ஸஹாபாக்களுக்கு உள்ளாள் பிரச்சனைகள் கருத்து முரண்பாடுகள் எல்லாம் வரும்).
இந்த பிரச்சனைகளோடு/ கருத்து முரண்பாடுகளோடு உள்ள என்னுடைய தோழர்கள் தான் என்னுடைய உம்மத்தின் பாதுகாவலர்கள்.
என்னுடைய தோழர்கள் என் உம்மத்தை விட்டு எப்பொழுது பிரிந்து விடுவார்களோ, என்னுடைய உம்மத்துக்கு பிரச்சனைகள் கஷ்டங்கள் உண்டாகும் என்று சொன்னார்கள்.
0 Comments